சென்னையில் உள்ள பிரபல டிராவல்ஸ் நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார் : விதிகளை மீறியதாக வழக்கு !!

Author: Udayachandran
26 July 2021, 11:05 am
TTD Complaint - Updatenews360
Quick Share

ஆந்திரா : சென்னையில் இருந்து செயல்படும் ரேவதி பத்மாவதி டிராவல்ஸ் நிறுவனம் மீது திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

சென்னையில் இருந்து செயல்படும் ரேவதி பத்மாவதி டிராவல்ஸ் நிறுவனம் தலா 2500 ரூபாய் கட்டணத்தில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு சேவை டிக்கெட்டுகள் மற்றும் உணவு வசதி ஆகியவற்றுடன் பக்தர்களை சென்னையிலிருந்து திருப்பதி மலைக்கு அழைத்து செல்வதாக பிரச்சாரம் செய்து உள்ளது.

இது தவிர திருப்பதி ஏழுமலையான் கோவில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவில், காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் ஆகிய கோவில்கள் உட்பட ஐந்து கோவில்களில் அதே கட்டணத்தில் சாமி தரிசனம் வசதியும் செய்து கொடுக்கப்படும் என்றும் விளம்பரம் செய்திருந்தது.

இதுதொடர்பான புகார் தேவஸ்தானத்திற்கு வந்த நிலையில் ரேவதி பத்மாவதி டிராவல்ஸ் நிறுவனம் மீது திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

இதுபற்றிய அறிவிப்பு வெளியிட்டுள்ள தேவஸ்தனம், பக்தர்கள் வசதிக்காக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள், கல்யாண உற்சவம் டிக்கெட்டுகள் ஆகியவை ஒவ்வொரு மாதமும் 20ஆம் தேதியன்று ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.

அந்த டிக்கெட்டுகளை பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து ஏழுமலையானை வழிபடலாம். இந்த நிலையில் ரேவதி பத்மாவதி டிராவல்ஸ் நிறுவனம் ஏழுமலையான் தரிசனம் உட்பட ஐந்து கோவில்களில் ஒருவருக்கு 2500 ரூபாய் கட்டணத்தில் சாமி தரிசனம் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆன்லைனில் பக்தர்கள் நேரடியாக பெற்றுக்கொள்ளும் வகையில் வெளியிடப்படும் டிக்கட்டுகளை தனியார் டிராவல்ஸ் நிறுவனம் முன் செய்து பதிவு செய்து பக்தர்களை கோவிலுக்கு அழைத்து செல்வது தேவஸ்தான விதிமுறைகளுக்கு மாறான செயலாகும் என்று அறிவித்துள்ள தேவஸ்தானம் இது தொடர்பாக ரேவதி பத்மாவதி டிராவல்ஸ் நிறுவனம் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

தேவஸ்தானத்தின் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் ரேவதி பத்மாவதி டிராவல்ஸ் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

Views: - 193

0

0