தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே திருப்பதியில் அனுமதி : வேதஸ்தானம் அதிரடி முடிவு!!

6 September 2020, 7:25 pm
tirupati Temple- Updatenews360
Quick Share

திருப்பதி: தரிசன டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே பக்தர்கள் திருப்பதி மலைக்கு செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையானை இலவசமாக தரிசிப்பதற்கு தேவையான டோக்கன்கள் வழங்கும் நடைமுறையை தேவஸ்தானம் இம்மாதம் 30ஆம் தேதி வரை கரோனா பரவல் காரணமாக தற்காலிக அடிப்படையில் நிறுத்தி வைத்துள்ளது.

எனவே இம்மாதம் 30ஆம் தேதி வரை ஏழுமலையானை இலவசமாக தரிசிக்க அனுமதி கிடையாது. இதனால் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க முடியும்.

இம்மாதம் 17ம் தேதி துவங்கி திருப்பதி ஏழுமலையானுக்கும், ஏழுமலையானின் அதிதீவிர பக்தர்கள் ஆன தமிழர்களுக்கும் உகந்த மாதமான புரட்டாசி நடை பெற உள்ளது. புரட்டாசி மாதத்தில் விரதமிருந்து ஏழுமலையானை வழிபடுவது தமிழக பக்தர்களின் வழக்கம்.

புரட்டாசி மாதம் ஏழுமலையானை தரிசனத்திற்காகவும், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஏழுமலையானை வழிபடவும் ஏராளமான அளவில் ஒவ்வொரு வருடமும் தமிழக பக்தர்கள் திருப்பதி மலைக்கு வந்து இலவச தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபடுவது தொன்றுதொட்டு வழக்கத்தில் இருக்கும் நடைமுறை.

தற்போதைய நிலையில் 9000 எண்ணிக்கையில் மட்டுமே 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ஆன்லைனில் விற்பனை செய்கிறது. இலவச தரிசன அனுமதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் தமிழக பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசன வாய்ப்பு வழக்கம்போல் இருக்காது.

300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து உடன் எடுத்து வரும் பக்தர்கள் மட்டுமே தேவஸ்தான நிர்வாகம் திருப்பதியில் இருந்து திருப்பதி மலைக்கு செல்ல அனுமதி அளிக்கும் நிலை காணப்படுகிறது.

எனவே 300 ரூபாய் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இயலாத நிலையில், குறைந்தபட்சம் திருப்பதி மலைக்கு சென்று அவருடைய கோவிலை மட்டுமாவது தரிசித்து வீடு திரும்பலாம் என்று கருதினால் அதுவும் நடக்காது என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

Views: - 0

0

0