திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்ப உற்சவம் : கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்களுக்கு அருள்பாலித்த மலையப்ப சுவாமி!!

Author: Udayachandran RadhaKrishnan
16 March 2022, 10:39 am
Tirupati Theppa Urchavam -Updatenews360
Quick Share

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்ப உற்சவத்தின் மூன்றாம் நாளில் சமேதராக தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஏழுமலையான் கோவில் தெப்போற்சவத்தின் மூன்றாவது நாளான நேற்று இரவு உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தெப்பத்தில் எழுந்தருளி உற்சவம் கண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .

தெப்போற்சவத்தை முன்னிட்டு முன்னிட்டு உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகள் வழியாக கோவில் திருக்குளம் ஆன சுவாமி புஷ்கரணியை அடைந்தார்.

தொடர்ந்து தெப்பத்தில் எழுந்தருளிய உற்சவர்களுக்கு தீப தூப நைவேத்திய சமர்ப்பணம் நடைபெற்றது. பின்னர் ஏழு முறை உற்சவர்களுடன் தெப்பம் திருக்குளத்தில் வலம் வந்தது.

அப்போது திருக்குளத்தின் நான்கு புறங்களிலும் காத்திருந்த பக்தர்கள் கோவிந்தா!கோவிந்தா!! என்று கோஷம் எழுப்பி வழிபாடு நடத்தினர்.

Views: - 295

0

0