வனவிலங்குகள் பிடியில் சிக்கிய திருப்பதி : தீவிர கண்காணிப்பு!!
23 September 2020, 7:47 pmதிருப்பதியில் இரவு நேரங்களில் வன விலங்குகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட புதிய யுக்தி கையாளப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. திருப்பதி மலையில் புலி, சிறுத்தை, கரடி யானை போன்ற விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவில் மூடப்பட்டதால் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையை சாதகமாக்கிய வனவிலங்குகள் கோவில் வளாகத்தில் சுற்றின. இந்த நிலையில் பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோவில் திறக்கப்பட்டன.
ஆனால் பக்தர்களின் வருகை குறைந்து காணப்படுவதால், வனவிலங்குகளின் நடமாட்டம தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து சென்சார் கேமராக்களை பொருத்தி வனவிலங்குகளை விரட்ட திருப்பதி வேதஸ்தானம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வனவிலங்குகள் நடமாடினால் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் சென்சார் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. எந்த பகுதிக்யில் இருந்து சென்சார் ஒலித்ததோ, அந்த பகுதிக்கு வன்துறையினர் சென்று விலங்குகளை விரட்ட திட்டமிட்டுள்ளனர். மேலும் மலைக்கு வரும் பக்தர்கள் எச்சரிக்கையுடன் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.