ஏழுமலையானை இலவசமாக தரிசிக்க முடியாது? பக்தர்களை ஷாக் ஆக வைத்த ஆன்லைன் முன்பதிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2021, 2:23 pm
Tirupati Online Booking -Updatenews360
Quick Share

திருப்பதி : டிசம்பர் மாதம் ஏழுமலையானை இலவச தரிசனத்திற்கு தேவையான டோக்கன் முன்பதிவு 17 நிமிடத்தில் முடிந்ததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

டிசம்பர் மாதம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை பக்தர்கள் வழிபடுவதற்காக நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இலவச தரிசனம் டோக்கன்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று காலை ஆன்லைனில் வெளியிட்டது.

9:00 மணிக்கு டோக்கன்கள் வெளியிடப்பட்ட நிலையில் டிசம்பர் மாதம் 31 நாட்களுக்கு ஆன 3 லட்சத்து 72 ஆயிரம் டிக்கெட்டுகளை 17 நிமிடத்தில் முன்பதிவு செய்தனர். இதனால் பெரும்பாலான பக்தர்களுக்கு டோக்கன்கள் கிடைக்கவில்லை.

Views: - 266

0

0