திருப்பதிக்கு வந்த பிரபலங்கள் : ஏழுமலையானை தரிசனம் செய்து வழிபாடு!

18 September 2020, 12:35 pm
Tirupati Dhatshan - updatenews360
Quick Share

ஆந்திரா : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், திரைப்பட நடிகர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் திருப்பதி ஏழுமலையானை வழிபட்டனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தெலுங்கு திரைப்பட நடிகர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் இன்று காலை திருப்பதி கோவிலுக்கு வருகை புரிந்து ஏழுமலையானை தரிசித்தனர்.

சாமி தரிசனத்திற்காக நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்தவர்கள் இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டனர். சாமி தரிசனத்திற்கு பின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள், நினைவு பரிசு ஆகியவை வழங்கப்பட்டன.

Views: - 9

0

0