தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது எப்போது? திருப்பதி ஏழுமலையான தரிசித்த அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி!!

1 October 2020, 10:34 am
Tirupati Ministers- updatenews360
Quick Share

ஆந்திரா : இ-பாஸ் நடைமறை தமிழகத்தில் படிப்படியாக ரத்து செய்யப்படும் என திருப்பதி ஏழுமலையானை தரிசித்த தமிழக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, கால்நடை துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று காலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டனர்.

சாமி கும்பிடுவதற்காக நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்த அவர்கள், இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்த கோவிலுக்கு வெளியே நிருபர்களுடன் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, கொரோனா தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டுதல்களை தமிழக அரசு முறையாக பின்பற்றி செயல்படுகிறது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. குணமாகி வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

இ பாஸ் நடைமுறை படிப்படியாக தமிழகத்தில் ரத்து செய்யப்படும் என்று கூறிய அவர், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் ஆகிவற்றை திறப்பதில் மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும். நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும்.

அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றினால் அடுத்த முதல்வர் யார், யார் தலைமையில் அதிமுக தேர்தலை சந்திக்க உள்ளது போன்ற கேள்விகளுக்கு ஏழாம் தேதி நடைபெற இருக்கும் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு பின் தேவையான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று கூறினார்.

Views: - 7

0

0