கேரளாவில் 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு: இன்று ஒரே நாளில் 8,733 பேருக்கு பாதிப்பு உறுதி

Author: kavin kumar
21 October 2021, 10:13 pm
Quick Share

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,733 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிக தினசரி கொரோனா பாதிப்பு உறுதியாகும் மாநிலமாகக் கேரளா இருந்து வருகிறது. அம்மாநிலத்தில் அண்மைக்காலமாகத் தினசரி கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைவதும், மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டுவதுமாக இருந்து வருகிறது.இந்த நிலையில் அம்மாநிலத்தில் கடந்த 13 ஆம் தேதி 11,079 பேருக்கு கொரோனா உறுதியானது. அதன்பிறகு தொடர்ந்து தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த நிலையில், நேற்று 11 11,079 பேருக்கு கொரோனா உறுதியானது.

இந்தநிலையில் இன்று மீண்டும் கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் வந்துள்ளது. அந்த வகையில், கேரளா மாநிலத்தில் இன்று 8,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 48,88,523 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று 118 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 27,202 பேர் உயிரிழந்துள்ளனர்.இன்று 9,855 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 47,79,228 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 81,564 பேர் சிகிச்சையில் உள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

Views: - 242

0

0