வாரத் தொடக்க நாளான இன்று சிலிண்டர் விலை திடீர் குறைப்பு.. எவ்வளவு தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2024, 10:24 am
cylinder - updatenews360
Quick Share

சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றன. அந்த வகையில், இந்த மாத தொடக்க நாளான இன்று, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.31 குறைந்துள்ளது.

இந்த மாதமும் விலை குறைக்கப்பட்டதை அடுத்து சிலிண்டர் விலை தொடர்ச்சியாக 4 ஆவது மாதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த ஜூன் 1ம் தேதி 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.1,840.50க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.31 குறைந்து சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.1,809 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த நான்கு மாதங்களில் சிலிண்டர் விலை ரூ.151 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.100 குறைக்கப்பட்ட நிலையில், இம்மாதம் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Senthil Balajiகிளைமாக்ஸ்க்கு நெருங்குகிறதா செந்தில் பாலாஜி வழக்கு? நாள் குறிச்சாச்சு… நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்..!!
  • Views: - 309

    0

    0