ஒலிம்பிக்கில் தலைசிறந்த வீரர்களின் சாதனைகளை எதிர்நோக்கியிருக்கிறோம் : பிரதமர் மோடி

Author: Babu Lakshmanan
23 July 2021, 4:27 pm
modi - olympic - updatenews360
Quick Share

ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்கியுள்ள நிலையில், உலகின் தலைசிறந்த வீரர்களின் சாதனைகளை எதிர்நோக்கி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஜப்பானின் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி இன்று தொடங்கியுள்ளது. இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் என பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் சுமார் 11,200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியா சார்பில் 127 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். ஒரு ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் அதிகபட்ச எண்ணிக்கை இதுதான்.

டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, பேட்மிண்டன், வில்வித்தை, ஹாக்கி என மொத்தம் 18 விளையாட்டுக்களில் பங்கேற்க இருக்கின்றனர்.

ஒலிம்பிக் கிராமத்தில் சுமார் 90 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ள நிலையில் தொடக்க நிகழ்ச்சியில் ஒரு நாட்டின் சார்பில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அணிவகுப்பில் ஆக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் மட்டும் பங்கேற்றார்.

இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஒலிம்பிக்கை மிகச்சிறப்பாக நடத்த ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “டோக்கியோ 2020 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்கை மிகச் சிறப்பாக நடத்த பிரதமர் யோஷிஹைட் சுகாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஒலிம்பிக்கில், உலகின் சிறந்த விளையாட்டு வீரர்களின் நம்பமுடியாத சாதனை நிகழ்வுகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம்,” என பதிவிட்டுள்ளார்.

Views: - 366

0

0