நாளை முதல் தமிழக ஆளுநர் டெல்லியில் 2 நாள் சுற்றுப்பயணம் : பிரதமர் மோடி, அமித்ஷாவுடன் முக்கிய ஆலோசனை!!

9 July 2021, 6:52 pm
Modi Banwarilal- Updatenews360
Quick Share

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியை நாளை மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திக்க உள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை மாலை 4 மணிக்கு சந்திக்கிறார். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு பதவி ஏற்ற பிறகு முதல்முறையாக பிரதமரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திக்கவுள்ளார்.

தமிழகத்தின் அரசியல் சூழல், கொரோனா நிலவரம், 7 பேர் விடுதலை உள்ளிட்டவை குறித்து பிரதமருடன் ஆளுநர் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நாளை மறுநாள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் ஆளுநர் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நவ.,5ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் சந்தித்திருந்தது குறிப்பிடதக்கது.

Views: - 144

0

0