மார்ச் 15 வரை காலநிலை ஆர்வலர் சுபம் காருக்கு முன்ஜாமீன்..! டூல்கிட் வழக்கில் டெல்லி நீதிமன்றம் உத்தரவு..!

12 March 2021, 12:52 pm
Court_UpdateNews360
Quick Share

விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக ஸ்வீடன் காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் மூலம் தற்செயலாக வெளியான டூல்கிட் வழக்கில் காலநிலை ஆர்வலர் சுபம் கார் சவுதாரிக்கு மார்ச் 15 வரை டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்படுவதற்கு முன்பாக, ஜாமீன் கோரி சவுதாரி நீதிமன்றத்தை நாடியிருந்தார். இதில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு காலநிலை ஆர்வலர் திஷா ரவிக்கு கடந்த மாதம் வழக்கமான ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா, மார்ச் 15’ஆம் தேதி பொறியியலாளராக இருந்து சமூக ஆர்வலராக மாறிய சாந்தனு முலுக் மற்றும் வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரிக்கும் போது, சவுதாரியின் மனுவும் விசாரணைக்கு எடுக்கப்படும் என்று கூறினார்.

“இதற்கிடையில், அடுத்த விசாரணை தேதி வரை அந்த நபருக்கு எதிராக எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்படக்கூடாது” என்று கூடுதல் அமர்வு நீதிபதி கூறினார். பம்பாய் உயர்நீதிமன்றம் சமீபத்தில் அவருக்கு மார்ச் 12’ஆம் தேதி வரை முன்ஜாமீன் வழங்கி பாதுகாப்பு அளித்தது. மேலும் மார்ச் 12’க்குப் பிறகு இந்த வழக்கை விசாரிக்கும், டெல்லியில் உள்ள தகுதிவாய்ந்த நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியிருந்தது.

விவசாயிகளின் எதிர்ப்பு தொடர்பான வழக்கில் சதி மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டை திஷா ரவி, சாந்தது முலுக் மற்றும் நிகிதா ஜேக்கப் ஆகியோர் எதிர்கொள்கின்றனர். டூல்கிட் என்பது இந்தியாவை இழிவுபடுத்துவதற்கும் வன்முறையை ஏற்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்ட நடவடிக்கையை அம்பலப்படுத்துவதாக உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

பிப்ரவரி 23’ஆம் தேதி, திஷா ரவிக்கு நீதிமன்றம் வழக்கமான ஜாமீன் வழங்கியது. அவர் தனது ஜாமீன் மனுவில், சாந்தனு முலுக் தான் இதற்கு முழுக் காரணம் என்றும், தனக்குத் தெரியாமலேயே டூல்கிட் மற்றவர்களால் திருத்தப்பட்டது எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 9

0

0