சுற்றுலா போகணுமா…இனி ரயில்களும் வாடகைக்கு விடப்படும்: ரயில்வே துறையின் அட்டகாசமான அறிவிப்பு..!!

Author: Aarthi Sivakumar
24 November 2021, 1:16 pm
Quick Share

புதுடெல்லி: பாரத் கவுரவ் என்ற பெயரில் சுற்றுலா ரயில்களை இயக்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில், பாரத் கவுரவ் என்ற பெயரில் சுற்றுலா ரயில்களை இயக்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் 190 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, முக்கிய நிகழ்ச்சிகள் தொடர்பான பயணங்களுக்கு தனியார் சுற்றுலா நிறுவனங்களோ அல்லது மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்களோ ரயில்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான உரிய வாடகையையும் அந்நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வரவேற்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா, ராஜஸ்தான், உள்ளிட்ட மாநிலங்கள் ஆர்வமுடன் இருப்பதாக ரயிவேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Views: - 210

1

0