புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் மரியாதை: கண்கலங்கிய நெகிழ்ச்சி வீடியோ!!

Author: Rajesh
26 February 2022, 4:40 pm
Quick Share

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த அக்.29ம் தேதி திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தி திரையுலகத்தையே அதிர்ச்சி அடைய செய்தது.

இதனைதொடர்ந்து, அவரது உடலுக்கு திரைஉலகத்தை சேர்ந்த பலரும், அரசியல் தலைவர்களும், பல்வேறு ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர். 46 வயதில் மாரடைப்பு காரணமாக புனித் ராஜ்குமார் உயிரிழந்த பின்பு தான் அவர் செய்து வந்த பல நல்ல விஷயங்கள் வெளியில் வந்தன.

பல குழந்தைகளின் படிப்பு செலவுகளை அவர் ஏற்று வந்துள்ளார். சிறிது நாட்களுக்கு முன்னர் புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படமான ஜேம்ஸ் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கண் கலங்க வைத்தது. சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் புனித் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார். கர்நாடகாவில் உள்ள கண்டீரவ ஸ்டுடியோசில் நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரது நினைவிடத்திற்கு சென்ற நடிகர் விஜய் சமாதியில் மாலை அணிவித்தும், ஆரத்தி காண்பித்தும் அஞ்சலி செலுத்தினார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 657

0

0