கட்சியில் இணைய வந்த பாஜகவினரை சானிடைசர் தெளித்து வரவேற்ற திரிணாமூல் காங்., நிர்வாகிகள்..!!

24 June 2021, 8:33 pm
tmc - updatenews360
Quick Share

மேற்கு வங்கத்தில் பாஜகவில் இருந்து விலகி கட்சியில் இணைய வந்தவர்களை சானிடைசர் தெளித்து வரவேற்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அதீத பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியை பிடித்தது. அதனைத் தொடர்ந்து, மாற்றுக் கட்சியினர், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் இளம்பசார் பகுதியில் பாஜகவைச் சேர்ந்த சிலர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, கட்சியில் இணைய வந்த பாஜகவினரை திரிணாமூல் கட்சியினர் சானிடைசர் தெளித்து வரவேற்றனர். இந்த செயலுக்கு கண்டனங்களும், எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன.

Views: - 174

0

0