திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்..! கோபத்தில் காதலன் மீது ஆசிட் வீசிய காதலி..!

29 October 2020, 7:42 pm
Acid_Attack_UpdateNews360
Quick Share

அகர்தலாவில் ஒரு பெண் தனது காதலன் தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் அவர் மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாயன்று, 27 வயதான பெண் கோவாய் உள்ளூர் நீதிமன்றத்தால் 14 நாள் நீதித்துறை ரிமாண்டிற்கு அனுப்பப்பட்டார். அந்த பெண்ணின் காதலன் வேறொரு பெண்ணுடன் டேட்டிங் செய்யத் தொடங்கினார் என்றும், அதுவே அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஆசிட் வீச்சுக்கு ஆளானவர் அகர்தலா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த நபரின் சுவாசக்குழாய், மூக்கு மற்றும் கண்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட பெண் பினாட்டா சந்தல் என அடையாளம் காணப்பட்டார். பாதிக்கப்பட்டவருடன் 8 ஆண்டுகளுக்கும் மேலாக உறவு கொண்டிருந்ததாக சந்தால் போலீசாரிடம் தெரிவித்தார். இருப்பினும், அந்த நபர் சமீபத்தில் வேறொரு பெண்ணுடன் உறவை வளர்த்து வந்துள்ளார். இதனால் மனம் வெறுத்த சந்தல் இந்த கோர முடிவை எடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபரை பள்ளியில் ஒன்றாக படித்த காலத்திலிருந்து பல ஆண்டுகளாக அறிந்திருப்பதாக அந்தப் பெண் கூறினார். 30 வயதான நபர் தனது பட்டப்படிப்பை முடித்த பின்னர் அவர்கள் புனேவுக்கு மாறியதாக அந்த பெண் கூறினார். சந்தல் புனேவில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மார்ச் 2018’இல், புனேவில் சந்தலை விட்டு பிரிந்து அந்த நபர் திரிபுராவுக்கு திரும்பினார். அடுத்த மூன்று மாதங்களுக்கு பிறகு அந்த நபர் சந்தலுடனான அனைத்து தொடர்புகளையும் முடித்தார்.

ஆகஸ்டில் சந்தல் திரிபுரா திரும்பியபோது, காதலனை அவருடைய கிராமத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அந்தப் பெண் ராஞ்சிக்குச் சென்று சுகாதாரப் பயிற்சி மையத்தில் வேலை செய்யத் தொடங்கினார்.

இந்நிலையில் தற்போது துர்கா பூஜையின் போது, அந்தப் பெண் பாதிக்கப்பட்டவரை பெல்செரா கிராமத்தில் கண்டுபிடித்து அவரை திருமணத்திற்கு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அந்த நபர் மறுத்ததால், சந்தல் தனது காதலன் மீது ஆசிட் வீசியதாக தெரிவித்துள்ளார்.

Views: - 24

0

0

1 thought on “திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்..! கோபத்தில் காதலன் மீது ஆசிட் வீசிய காதலி..!

Comments are closed.