துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு சிக்கல் : நாளை ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2022, 1:54 pm
Sisodiay CBI - Updatenews360
Quick Share

டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. ஆம் ஆத்மி மூத்த தலைவரான மணிஷ் சிசோடியா துணை முதல்வராக உள்ளார்.

இவர், கலால் துறையையும் கவனித்து வருகிறார். தனியார் நிறுவனங்களுக்கும் உரிமம் வழங்கும் வகையில் மதுபான விற்பனை கொள்கையில், கடந்தாண்டு மாற்றம் செய்யப்பட்டது.

இதில், சில தனியார் நிறுவனங்களுக்கு சலுகை காட்டப்பட்டதாகவும், இதனால் டில்லி மாநில அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு டில்லி துணை நிலை கவர்னர் உத்தரவிட்டார்.

அதன்படி, சிசோடியாவின் வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகளும், மதுபான நிறுவனங்கள் குறித்த இடங்கள் என பல்வேறு மாநிலங்களிலும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சோதனை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணைக்காக நாளை ஆஜராகும்படி மணிஷ் சிசோடியாவுக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இது தொடர்பாக மணிஷ் சிசோடியா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எனது வீடு, வங்கி லாக்கர், சொந்த கிராமத்தில் சிபிஐ சோதனை நடத்தியும் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

தற்போது, விசாரணைக்காக நாளை காலை 11 மணிக்கு தலைமை அலுவலகம் வரும்படி அழைத்துள்ளனர். நாளை நான் சென்று விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Views: - 298

0

0