கூலித் தொழிலாளிகள் சென்ற வாகனம் மீது லாரி மோதி கோர விபத்து : கைகள் துண்டாகி 3 பெண்கள் பலியான சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2022, 6:39 pm
Teleangana Accident - Updatenews360
Quick Share

தெலுங்கானா : கூலித் தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் மீது லாரி மோதியதில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் வரங்கல் மாவட்டம் சாயம்பேட்டை மண்டலம் மந்தாரபேட்டை அருகே கோர சாலை விபத்து ஏற்பட்டது. பத்திபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 25 கூலித்தொழிலாளர்கள் ஜெய்சங்கர் பூபாலபள்ளி மாவட்டம் மோகுள்ளபள்ளி மிளகாய்த் தோட்டத்தில் பணிபுரிய வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதியது.

இதில் 3 பெண் கூலி தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழக்க 7 பேர் தீவிர காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பரகால போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு வரங்கள் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூலி வேலைக்கு என்று சக தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பத்தி பாக்கம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 521

0

0