லாரி கவிழ்ந்து விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி : கிளீனர் லாரியை ஓட்டியதால் ஏற்பட்ட விபரீதம்!!

7 July 2021, 2:21 pm
Lorry Upset- Updatenews360
Quick Share

ஆந்திரா : கிருஷ்ணா மாவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் லாரியில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக மரணமடைந்தார்.

சென்னை,கல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பாரம் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரியில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசலு, ராஜலட்சுமி அவர்களது இரண்டு வயது மகன் ரோஹித் ஆகியோர் பயணித்தனர்.

எதிர்பாராதவிதமாக லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் அதில் பயணித்த 3 பேரும் பரிதாபமாக மரணமடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று மரணமடைந்தவர்கள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கிளீனர் லாரியை ஓட்டியதே விபத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. லாரியை மீட்கும் பணிகள் நடைபெறுகின்றன

Views: - 210

0

0