லாரி, ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து : சிதைந்த ஆட்டோ, பரபரப்பு காட்சி!!

22 January 2021, 10:05 am
Accident- Updatenews360
Quick Share

தெலுங்கானா : நலகொண்டா மாவட்டம் அருகே ஆட்டோ, லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள அங்காடிபேட்டை அருகே இன்று இரவு கூலி தொழிலாளர்களை ஏற்றி சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ, லாரி ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த கூலி தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக மரணமடைந்தனர். 11 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

நலகொண்டா மாவட்டம் சிந்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஆட்டோ சுக்குநூறாக நொறுங்கியது.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆட்டோவில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பயணிகளை ஏற்றி இருந்ததே விபத்திற்கான காரணம் என்று தெரியவந்துள்ளது.

Views: - 0

0

0