“ஊசியே போடாம தடுப்பூசி போட்டுக் கொண்டதாக பில்டப்“: அதிர்ச்சி வீடியோ!

21 January 2021, 7:54 pm
Injection action- Updatenews360
Quick Share

கர்நாடகா : தும்கூரில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக பொய்யாக படம்பிடித்து கொண்ட மாவட்ட நல்வாழ்வு அதிகாரி, செவிலியர் கல்லூரி முதல்வர் ஆகியோரை பணிநீக்கம் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அப்போது மாவட்ட நலவாழ்வு அதிகாரி நாகேந்திரப்பா, கல்லூரி முதல்வர் ரஜினி மற்றும் அரசு செவிலியர் ஆகியோர் தடுப்பூசி போட்டது போல பொய்யாக படம்பிடித்துள்ளனர்.

ஊசி உடலில் படும்படி வைத்துவிட்டு தடுப்பூசி போட்டுக்கொண்டது போல படம் பிடித்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மக்களை ஏமாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். எத்தனையோ முன்களப்பணியாளர்கள் தடுப்பூசி போட தாமாக முன்வந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில், உயர் பதவியில் இருப்பவர்கள் செய்த செயல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0