கண்ணை மறைத்த கள்ளக்காதல் : இரட்டைக் குழந்தைகளை கொன்ற துணிகரம்!!

15 September 2020, 3:27 pm
Illegal Contact - updatenews360
Quick Share

ஆந்திரா : உறவினர்கள் கண்டித்ததால் இரட்டை குழந்தைகளை கிணற்றில் வீசி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடியின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சதும் மண்டலத்தில் உள்ள சிந்தப்பர்த்தி பள்ளியை சேர்ந்த ஹேமஸ்ரீ என்பவருக்கு ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்று இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு முன் உதய்குமார் என்பவருடன் ஹேமஸ்ரீக்கு தகாத தொடர்பு ஏற்பட்டது.
இதனை அறிந்த உறவினர்கள் ஹேமஸ்ரீயை கண்டித்து கள்ள தொடர்பை கைவிடும்படி அறிவுரை கூறினர்.

கள்ளக்காதலனை கைவிட இயலாத ஹேமஸ்ரீ இதுபற்றி உதயகுமாருக்கு தகவல் அளித்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை இரண்டு பேரும் சிந்தப்பர்த்திபள்ளி கிராமம் அருகே உள்ள கிணற்றில் இரட்டைக் குழந்தைகள் தூக்கி வீசனர்.

பின்னர் 2 பேரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இந்த சம்பவத்தில் இரட்டை குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாபமாக மரணம் அடைந்த நிலையில் கள்ளக்காதல் ஜோடியினர் உயிருக்கு போராடிய நிலையில் முட்புதரில் கிடந்தனர்.

அந்த வழியாக இன்று காலை சென்றவர்கள் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து உயிருக்கு போராடி கொண்டிருப்பது பற்றிய தகவலை கிராம மக்களுக்கு தெரிவித்தனர். அங்கு சென்ற கிராம மக்கள் இரட்டை குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த கள்ளக்காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்று உயிருக்கு போராடி கொண்டிருப்பது பற்றிய தகவலை சதும் போலீசாருக்கு தெரிவித்தனர்.

விரைந்து சென்ற போலீசார் குழந்தைகள் உடல்களை கிணற்றிலிருந்து மீட்பு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கள்ளக்காதல் ஜோடியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 10

0

0