25வது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த இரட்டை சகோதரர்கள்: கொலையா? தற்கொலை?…காசியாபாத்தில் அதிர்ச்சி..!!

Author: Aarthi Sivakumar
18 October 2021, 4:00 pm
Quick Share

காசியாபாத்: அடுக்குமாடிக் குடியிருப்பின் 25வது மாடியில் உள்ள தங்களது வீட்டில் இருந்து 14 வயது இரட்டை சகோரர்கள் கீழே விழுந்து உயிரிழந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் சித்தார்த் விஹாரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் சென்னையைச் சேர்ந்த தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 14 வயதில் சூரியநாராயணன், சத்யநாராயணன் என்ற இரட்டை மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

latest tamil news

சிறுவர்களின் தந்தை வேலை விஷயமாக மும்பை சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் குடியிருப்பின் 25வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சிறுவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக சிறுவர்களின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். சிறுவர்கள் நள்ளிரவில் நிலாவை பார்க்க ஆசைப்பட்டு தவறி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? விபத்தா? என்ற கோணங்களில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே தெரியும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

latest tamil news

14 வயதே ஆன இரட்டை சகோதரர்கள் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 489

0

0