குறைதீர்ப்பு அதிகாரியை நியமித்தது டுவிட்டர்..!

11 July 2021, 4:37 pm
Twitter_UpdateNews360
Quick Share

டெல்லி: புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை பின்பற்றும் விவகாரத்தில் மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை டுவிட்டர் நிறுவனம் கையாண்டு வந்தது.

மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்தப் புதிய சட்டத்தின் விதிமுறைகளுக்கு டுவிட்டர் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், புதிய விதிகளின்படி இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி கெடு வழங்கியது. ”அதற்கு டுவிட்டர் பதிலளிக்காததை அடுத்து, டுவிட்டர் நிறுவனம் பெற்றுள்ள சட்டப் பாதுகாப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. தொடர்ந்து மத்திய அரசுடன் இவ்விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனம் மோதல் போக்கை கையாண்டு வந்தது. இந்நிலையில், உள்நாட்டு குறைதீா் அதிகாரியாக வினய் பிரகாஷை டுவிட்டர் நியமித்துள்ளது. வினய் பிரகாஷ் குமாரின் மின்னஞ்சல் முகவரியையும் டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Views: - 59

0

0