விவசாயிகளின் போராட்டத்தை தூண்டிய டிவிட்டர் பதிவுகள் : 200 கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவு!!
2 February 2021, 9:25 amடெல்லி : வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தை தூண்டு வகையில் பதிவுகளை வெளியிட்ட 200 டிவிட்டர் கணக்குகளை முடக்கம் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த டிசம்பர் மாதம் முதல் விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தன.
மேலும் குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் சார்பாக டிராக்டர் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி நடந்த பேரணி வன்முறையில் முடிந்தன. இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டத்தை தூண்டிய 200 டிவிட்டர் கணக்குகளை முடக்க டிவிட்டர் நிறுவனத்திற மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக மத்திய அரசு டிவிட்டர் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையிலும், தவறான தகவல்களை பரப்பும் வகையிலும் பதிவுகளை வெளியிட்ட டிவிட்டர் கணக்குகளை அடையாளம் காணப்பட்டது. அதன்படி 200 கணக்குகளை முடிக்கியிருப்பதாக டிவிட்டர் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
0
0