இரண்டு தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்..! காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் என்கவுண்டர்..!

17 May 2021, 12:37 pm
Kashmir_Encounter_Terrorists_UpdateNews360
Quick Share

ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள கன்மோவில் இன்று பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரு பயங்கரவாதிகளும் அல்-பத்ர் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என்று கூறப்படுகிறது. காஷ்மீர்ஐ.ஜி விஜய்குமார் இந்த சமபவம் குறித்து தகவலை வெளியிட்டுள்ளார். முன்னதாக, ஒரு பயங்கரவாதி இறந்துவிட்டதாக அடையாளம் காணப்பட்டார். ஆனால் மேலும் அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதி பின்னர் கொல்லப்பட்டார்.

“என்கவுண்டரில் கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகள் அல்-பத்ர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்” என்று ஐஜி விஜய் குமார் கூறினார்.

காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்த ஒரு கூட்டு குழு அந்தப் பகுதியை சுற்றி வளைத்து பயங்கரவாதிகள் இருப்பதைப் பற்றிய குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கிய பின்னர் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.

பயங்கரவாதிகள் மறைந்திருந்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் நெருங்கிய நிலையில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டை தீவிரப்படுத்தியதால், பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த என்கவுண்டர் காஷ்மீரின் கான்மோ பகுதியில் தொடங்கியது.

Views: - 136

1

0