எல்லையில் மீண்டும் அடாவடி..! பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம்..!

27 November 2020, 3:32 pm
Indian_Army_Kupwara_UpdateNews360
Quick Share

ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் மீண்டும் அத்துமீறி கடும் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு, கட்டுப்பாட்டுக் கோட்டில் மோட்டார் குண்டுகளை வீசியதில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் இன்று வீரமரணம் அடைந்தனர் என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் மேற்கொண்ட அறிவிக்கப்படாத துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய ராணுவம் உடனடியாக கடும் பதிலடி கொடுத்தது என அவர் மேலும் கூறினார்.

“பாகிஸ்தான் இராணுவம் இன்று ராஜோரி மாவட்டத்தின் சுந்தர்பானி செக்டரில் கட்டுப்பாட்டுக் கோட்டில் அறிவிக்கப்படாத போர்நிறுத்த மீறலை மேற்கொண்டது” என்று பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் நாயக் பிரேம் பகதூர் காத்ரி மற்றும் ரைபிள்மேன் சுக்பீர் சிங் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இறந்தனர் என்று அவர் கூறினார்.

அவர்களின் உயர்ந்த தியாகம் மற்றும் கடமை மீதான பக்திக்கு நாடு எப்போதும் அவர்களுக்கு கடன்பட்டிருக்கும் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

முன்னதாக நேற்று, பூஞ்ச் மாவட்டத்தின் கிர்னி மற்றும் கஸ்பா செக்டர்களில் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் சுபேதார் ஸ்வதந்திர சிங் கொல்லப்பட்டார் மற்றும் பொதுமக்களில் ஒருவர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 21

0

0