காட்டுக்குள் கால்பந்து விளையாடிய இரண்டு கரடிகள் : கைத்தட்டி உற்சாகப்படுத்திய பார்வையாளர்கள்!!

Author: Udayachandran
14 September 2021, 4:31 pm
Bear Play Foot Ball -Updatenews360
Quick Share

ஒடிசா : வனப்பகுதிக்குள் 2 கரடிகள் நாங்களும் விளையாடுவோம் என கால்பந்து விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 2 கரடிகள் கால்பந்து விளையாடிய காட்சிகளை மாவட்ட வனத்துறை அதிகாரி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குறிப்பிட்ட அந்த வீடியோவில், தரையில் கிடந்த கால்பந்தை பார்த்ததும் இரண்டு கரடிகள் ஜாலியாக விளையாடின. வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பார்வையாளர்களாக மாறி கரடிகளுக்கு கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினர்.

கை தட்டும் ஓசையை கேட்ட கரடிகள் வனப்பகுதிக்குள் விரைந்து ஓடின. இது தொடர்பான காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 156

0

0