இரு பைக்குகள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து : தூக்கி வீசப்பட்ட வாகன ஓட்டி.. பதற வைத்த காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2021, 12:32 pm
Telangana Accident - Updatenews360
Quick Share

தெலுங்கானா : அஜாக்கிரதை காரணமாக இரண்டு மோட்டர் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒருவர் சம்பவ பலியான நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர வைத்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் மேட்ச்சல் மாவட்டத்தில் உள்ள சாமீர்பேட்டை பேருந்து நிலையம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இரு பைக்குகள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நொறுங்கி அதில் பயணித்த ஒருவர் பரிதாபமாக மரணமடைந்தார்.

மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த இரண்டு பேர் திடீரென்று சாலையை கடக்க முயன்ற நிலையில் நேராக வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் மீது பயங்கர வேகத்தில் மோதியது.

இந்த விபத்தில் இரண்டு வாகனங்களும் நொருங்கி சேதமடைந்து சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு அதில் பயணித்த ஒருவர் மரணமடைந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள சாமீர் பேட்டை போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 271

0

0