ஐதராபாத் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : 8 பேர் பலியான சோகம்.. 2 பேர் படுகாயம்!!

Author: Udayachandran
24 July 2021, 9:24 am
Car Accident 8 Dead -Updatenews360
Quick Share

தெலுங்கானா : ஹைதராபாத் ஸ்ரீசைலம் இடையே நாகர் கர்னூல் தேசிய நெடுஞ்சாலையில் எதிரெதிர் திசையில் வந்த இரண்டு கார்கள் வேகமாக மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஸ்ரீசைலம் இடையே எட்டு வழி தேசிய நெடுஞ் சாலை உள்ளது. ஆனாலும் பொதுமக்கள் தங்கள் வழக்கத்தின் அடிப்படையில் எட்டு வழி சாலையிலும் சாலை விதிகளை மீறி எதிர் திசையில் பயணிப்பது வழக்கமாக உள்ளது.

நாகர் கர்னூல் அருகே இருக்கும் டோல்கேட் பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற இதேபோன்ற போக்குவரத்து விதிமீறல் காரணமாக கார் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது அதே வழியில் வந்துகொண்டிருந்த காரும் விதிகளை மீறி எதிர் திசையில் சென்று கொண்டிருந்த காரும் வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் இரண்டு கார்களிலும் பயணித்தவர்களில் 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக மரணமடைந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கர்னூல் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஹைதராபாத் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். விபத்தில் சிக்கி இறந்து போன 8 பேரின் உடல்களும் நசுங்கி போன கார்களுக்குள் சிக்கியதால் உடலை மீட்க சிறிது நேரம் காலதாமதமானது.

Views: - 178

0

0