துப்பாக்கியால் கேக்வெட்டிய இருவர் கைது… வைரல் வீடியோவால் சிக்கினர்.

18 January 2021, 8:31 am
Quick Share

நாட்டுத் துப்பாக்கியால் கேக் வெட்டிய உ.பி மாநிலத்தைச் சேர்ந்த இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சமூகவலைத்தளங்களில் இருவர் துப்பாக்கியால் கேக் வெட்டும் விடியோ ஒன்று வைரலாக பரவியது. இந்தியில் பேசிய இந்த விடியோ வட இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்கள் எல்லாம் இவர்கள் கையில் எப்படி துப்பாக்கி வந்தது எனச் சமூகவலைத்தளங்களில் பல்வேறு கேள்விகளையும் கண்டனங்களையும் எழுப்பினர்.

இந்நிலையில் இந்த விடியோ உ.பி மாநிலம் ஹப்பூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள இருவர் செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஹப்பூர் போலீசார் நடத்திய விசாரணையில் துப்பாக்கியை வைத்து கேக் வெட்டிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் கேக் வெட்டப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் பரிமுதல் செய்யப்பட்டது ஒரு நாட்டு ரகத் துப்பாக்கியாகும். தற்போது போலீசார் இவர்களிடம் எப்படி துப்பாக்கி வந்தது? யார் இவர்களுக்கு துப்பாக்கியை விற்பனை செய்தது? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

வைரலான வீடியோவில் சிவப்பு சட்டை போட்ட நபர் கையில் துப்பாக்கியுடன் நிற்கச் சுற்றியிருந்த கூட்டம் ஆரவாரப்படுத்திக்கொண்டு இருந்தது. அதன் பின் அவர் துப்பாக்கியால் கோக்கை வெட்டினார். பின்னர் மற்றொருவரும் அவருடன் சேர்ந்து கேக்கை வெட்டினார். 20 விநாடிகள் மட்டும் ஓடும் இந்த விடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் அவர்களைக் கைது செய்து அதை டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர். இவர்களைக் கைது செய்ததற்காகப் பலர் ஹப்பூர் போலீசாரை சமூகவலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Views: - 5

0

0