மற்றொரு பாஜக முதலமைச்சர் மாற்றப்படுகிறாரா?: தட்டச்சில் சின்ன எழுத்துப் பிழை…தர்மசங்கடத்தில் ஹிமாச்சல் முதலமைச்சர்..!!

Author: Aarthi Sivakumar
20 September 2021, 4:15 pm
Quick Share

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் மக்கள் தொடர்புத்துறை அறிக்கையில் செய்த சிறு எழுத்து பிழையால் முதலமைச்சருக்கு தர்மசங்க்டம் ஏற்பட்டுள்ளது.

இமாச்சலில் முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர்ர் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜ.க ஆட்சி நடைபெறும் கர்நாடகா, குஜராத், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் முதலமைச்சர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இமாச்சலிலும் முதலமைச்சர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக வதந்தி பரவியுள்ளது. இந்நிலையில் மாநில மக்கள் தொடர்புத்துறை ட்விட்டரில் சமீபத்தில் வெளியிட்ட பதிவில் முதலமைச்சர் பெயரை ஜெய்ராம் என்பதற்கு பதில் ‘ஜாவோ ராம்’ என இந்தியில் தட்டச்சு செய்யப்பட்டிருந்தது.

இந்தியில் ‘ஜாவோ’ என்றால் செல்கிறார் என்று அர்த்தம். இதையடுத்து முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் மாற்றப்பட போவதாக வதந்தி வேகமாக பரவத் தொடங்கியது. தவறை உணர்ந்த மக்கள் தொடர்புத்துறை உடனடியாக தவறை திருத்தம் செய்தது. இருப்பினும், இந்த வதந்தியில் முதலமைச்சர் ஜெய்ராம் தாகூருக்கு தர்மசங்கடம் உருவாகியுள்ளது.

இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் குல்தீப் ரத்தோர் கூறுகையில், ‘இது எதேச்சையாக நடந்த தவறாக இருக்கலாம். ஆனால் நடக்கப்போவது தான் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் விரைவில் மாற்றப்பட போவது உண்மை என தெரிவித்துள்ளார். ஆனால், காங்கிரஸ் தலைவரின் கருத்துக்கு பா.ஜ.க மறுப்பு தெரிவித்துள்ளது.

Views: - 178

0

0