பத்மாவதி தாயார் கோவிலுக்கு வெண்பட்டு குடை : சென்னை டிரஸ்ட் சார்பாக சமர்ப்பணம்!!

12 November 2020, 3:36 pm
Thirupathi - Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு சென்னை இந்து தர்மார்த்த சமிதி திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடைபெறும் கார்த்திகை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சுவாமி வாகன சேவைகளில் அலங்கரிப்பதற்கு தேவையான வெண்பட்டு குடைகளை சென்னையை சேர்ந்த இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் இன்று நன்கொடையாக வழங்கியது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரமோற்சவம் ஆகியவற்றின் போது சுவாமி வாகன சேவைகளில் அலங்கரிப்பதற்கு தேவையான வெண்பட்டு குடைகளை ஒவ்வொரு ஆண்டும் சென்னையை சேர்ந்த இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் காணிக்கையாக சமர்பித்து வருகிறது.

தற்போது திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் துவங்கி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பத்மாவதி தாயாரின் சுவாமி வாகன சேவைகளில் அலங்கரிப்பதற்கு தேவையான மூன்று வெண்பட்டு குடைகளை இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் இன்று காணிக்கையாக சமர்ப்பித்தது.

தேவஸ்தானம் சார்பில் இணை நிர்வாக அதிகாரி பசந்த் குமார் இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜியிடமிருந்து திருக் குடைகளை பெற்று கொண்டார். நிகழ்ச்சியில் கோவில் துணை நிர்வாக அதிகாரி ஜான்சிராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 21

0

0