ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் நகராட்சியில் உள்ள நீலகுண்டா கிராமத்தை சேர்ந்த நாகராஜு கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
நாகராஜுக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவரது மனைவி மீண்டும் கர்பமானதால் பிறந்த வீட்டிற்கு பிள்ளைகளுடன் சென்றார்.
இதனால் நாகராஜ் தனது அண்ணன் மகள் மீது தனது காம ஆசையை தீர்த்து கொள்ள சிறுமி பள்ளிக்கு செல்லும் போது தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து மைனர் பெண்ணை பள்ளியில் இருந்து தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.
அங்கு தனது மகள் வயது கொண்ட மைனர் பெண் பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் சிறுமியிடம் இதுகுறித்து வெளியே சென்னால் பெற்றோரை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தான்.
இதனால் மைனர் சிறுமி பயத்தில் வெளியே சொல்லவில்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு பலமுறை சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால், சிறுமி கர்ப்பமானார் இதையறிந்த நாகராஜு, மைனர் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் சிறுமியின் தாயார் நாளுக்கு நாள் சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டு வந்ததை பார்த்து மருத்துவரிடம் கொண்டு சென்று பரிசோதனை செய்தார்.
இதில் மைனர் பெண் எட்டு மாத கர்ப்பிணி என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் நடந்த விஷயத்தை கேட்டு அறிந்தனர்.
பின்னர் நாகராஜை பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து ஊர் பொதுமக்கள் உதவியுடன் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். மைனர் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பலமனேர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.