உண்ட வீட்டுக்கு ரெண்டகம்.. ரியல் எஸ்டேட் அதிபரின் ரூ.55 லட்ச ரூபாயை எடுத்து தலைமறைவான ஓட்டுநர் : காத்திருந்த டுவிஸ்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 September 2021, 8:16 pm
Driver Escape With Money -Updatenews360
Quick Share

தெலுங்கானா : ரியல் எஸ்டேட் அதிபரிடம் 55 லட்ச ரூபாயை அபேஸ் செய்த கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சஞ்சீவய்யா. அவரது கார் ஓட்டுனர் ஸ்ரீநிவாஸ். இம்மாதம் 25ஆம் தேதி 55 லட்ச ரூபாயை கார் டிரைவருடன் கொடுத்த சஞ்சீவ் ஐயா ஐதராபாத்தில் பஞ்சார ஹில்ஸ்ல் உள்ள ஒரு நபரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.

பணம் வாங்கி சென்ற ஸ்ரீநிவாஸ் தன்னுடைய செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். நீண்ட நேரம் முயற்சித்தும் அவர் எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடிக்க இயலவில்லை. எனவே சஞ்சீவ் ஐயா ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்தார்.

சஞ்சீவய்யா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கார் டிரைவர் ஸ்ரீனிவாசை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் சுற்றி திரிந்து கொண்டிருந்த ஸ்ரீநிவாசை ஜுப்ளி ஹில்ஸ் போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தன்னுடைய நண்பர் விஜய் என்பவருடன் சேர்ந்து திட்டம் போட்டு பணத்தை எடுத்து சென்றதாக தெரிவித்தார். அவரிடமிருந்த வேறொரு காரை பறிமுதல் செய்த போலீசார் 50 லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

மீதி 5 லட்சம் ரூபாய் பணத்தை இரண்டு பேரும் சேர்ந்து செலவு செய்து விட்டனர். ஸ்ரீநிவாஸ் நண்பர் விஜய் தலைமறைவாக உள்ளதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Views: - 341

0

0