பிரதமர் மோடி தலைமையில் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை!!

Author: Aarthi Sivakumar
29 June 2021, 12:23 pm
Quick Share

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதன் காரணமாக மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன.

பல்வேறு மாநிலங்களில் பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து நாளை மாலை மத்திய அமைச்சர்கள் குழு ஆலோசனை கூட்டமும் நடைபெற உள்ளது.

cabinet updatenews360

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கொரோனா மூன்றாவது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பூசிப் பணிகளை மேலும் துரிதப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி அமித் ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தி இருந்தது.

மேலும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் பொருளாதாரத்தை புதுப்பிக்க மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சிதாராமன் பல பொருளாதார நடவடிக்கைகளை அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 210

0

0