மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கொரோனா தொற்று உறுதி…!!

19 November 2020, 7:21 pm
bjp pondy head - updatenews360
Quick Share

புதுடெல்லி: மத்திய ரசாயன துறை அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்களும், மக்கள் பிரதிநிதிகளும், அரசியல் பிரமுகர்களும், முன்கள பணியாளர்கள் என பொதுமக்களில் பலர் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய ரசாயனம் மற்றும் உரங்களுக்கான மந்திரி சதானந்த கவுடாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

கொரோனா பாதிப்புக்கான தொடக்க அறிகுறிகள் தெரிந்தவுடன், அதற்கான பரிசோதனைகளை நான் செய்து கொண்டேன். அதன் முடிவில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் நான் என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன்.

என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் ஒவ்வொருவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டு கொள்கிறேன். அதற்கான விதிமுறைகளையும் பின்பற்றும்படி கேட்டு கொள்கிறேன். பாதுகாப்புடன் இருங்கள் என தெரிவித்து உள்ளார்.

Views: - 19

0

0