மொட்டை அடித்து ஏழுமலையானை தரிசித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் : பதவி கிடைத்ததால் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்!!
Author: Udayachandran RadhaKrishnan21 August 2021, 1:28 pm
ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய தகவல் தொடர்பு இணை அமைச்சர் எல் முருகன் சுவாமி தரிசனம் செய்து கொண்டார்.
திருப்பதி ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று இரவு வந்த மத்திய தகவல் தொடர்பு இணை அமைச்சர் எல் முருகன் திருமலைக்கு வந்தார். நேற்று இரவு முடிகாணிக்கை அளித்தபின் இன்று காலை விஐபி தரிசனம் மூலமாக சுவாமி தரிசனம் செய்து கொண்டார்.
அவருக்கு கோவில் சார்பாக தங்கர் நாயக்கர் மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்த மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
கோவிலுக்கு வெளியே வந்த அவர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசிய போது, பதவி கிடைத்த முதல் முறையாக ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்து கொள்கிறேன். அதேபோல் கொரோனா தொற்றிலிருந்து நாட்டு மக்கள் விடுபட்டு நலமுடன் இருக்க வேண்டும் எனவும் தனது துறை சார்ந்த பணியை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
0
0