மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா தொற்று…! நண்பர்கள் பரிசோதித்துக் கொள்ள வேண்டுகோள்

8 August 2020, 9:23 pm
Quick Share

டெல்லி: மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி தமக்கு கொரோனா இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மருத்துவர்கள், மக்கள் தவிர அமைச்சர்களையும் கொரோனா தாக்கி வருகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனாவுக்கு சிகிக்சை பெற்று வருகிறார்.

இந் நிலையில் மற்றொரு மத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய வேளாண் அமைச்சர் கைலாஷ் சவுத்ரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். தமக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகள் பாசிட்டிவ் என்று வந்திருப்பதாக அவர் கூறி உள்ளார்.

அவர் இப்போது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அறிகுறிகளால் அவருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து, கொரோனா வைரசுக்கான அறிக்கையில் பாசிடிவ் வந்துள்ளதாக சவுத்ரி ட்வீட் செய்துள்ளார். என்னுடன் தொடர்பு வைத்து இருந்தவர்கள் அனைவரும் தங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் தமது டுவிட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமக்கு மூச்சு திணறல் இருப்பதாகவும், அதற்கும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருப்பதாகவும் அவர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.