அமேதி மக்களை அவமதித்த ராகுல் காந்தி..! மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கடும் கண்டனம்..!

6 March 2021, 6:32 pm
Smriti_Irani_UpdateNews360
Quick Share

பிரித்தாளும் அரசியலுக்காக அமேதி மக்களை இழிவுபடுத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று கடுமையாக விமர்சித்துள்ளார். வடக்கில் உள்ள வாக்காளர்களை கேரளாவில் உள்ளவர்களுடன் ஒப்பிட்டு அமேதி மக்களைஅவமதித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

அமேதி தொகுதியின் திலோயில் ஒரு பஸ் ஸ்டாண்டிற்கு அடிக்கல் நாட்டிய அமேதி எம்.பி.யான ஸ்மிரிதி இரானி, ராகுல் காந்தி காந்தி அமேதியின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை என்ற போதிலும் 15 ஆண்டுகளாக ராகுல் காந்திக்கு அபரிமிதமான அன்பைக் கொடுத்தார்கள் என்றார்.

“கேரளாவில் உள்ளவர்களை விட அமேதி மக்களிடையே புரிந்துணர்வு குறைபாடு இருப்பதாக ராகுல் காந்தி சொல்வது தவறு. அமேதி மக்களிடையே புரிந்துணர்வுக்கு பஞ்சமில்லை என்று நான் நம்புகிறேன். மாறாக அது ராகுல் காந்தியிடம் தான் உள்ளது.” என்று அவர் கூறினார்.

அண்மையில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, “முதல் 15 ஆண்டுகளாக நான் வடக்கில் ஒரு எம்.பி.யாக இருந்தேன். நான் வேறு வகையான அரசியலுடன் பழகினேன். என்னைப் பொறுத்தவரை கேரளாவுக்கு வருவது மிகவும் புத்துணர்ச்சியாக இருந்தது. திடீரென்று மக்கள் பிரச்சினைகளில் ஆர்வம் காட்டுகிறார்கள், மேலோட்டமாக மட்டுமல்ல, விரிவாகவும் செல்கிறார்கள்.” எனக் கூறியிருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த வடக்கு-தெற்கு பிரிவினைவாத அரசியல் குறித்து பேசிய ஸ்மிரிதி இரானி, நாட்டின் ஒரு அரசியல் குடும்பம் அமேதியை 30 ஆண்டுகள் ஆட்சி செய்தது என்றும் ஆனால் அதன் வளர்ச்சி குறித்து ஒருபோதும் சிந்திக்கவில்லை என்றார்.

“அமேதியை வளர்த்து, இங்கே ஒரு மருத்துவக் கல்லூரியைத் திறப்பதற்குப் பதிலாக, அவர்கள் தொடர்ந்து தங்கள் விருந்தினர் மாளிகையை கட்டியெழுப்பினர்.” என்று அவர் கூறினார்.

விவசாயிகளைப் பற்றி பேசுகையில், ஸ்மிரிதி இரானி 2013’ல், ராகுல் காந்தியின் கட்சி ஆட்சியில் இருந்தபோது, அமேதியில் 800 விவசாயிகளுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலையின் பயன் கிடைத்தது என்றும், இதுவே 2020 ஆம் ஆண்டில் 23,800 விவசாயிகள் இங்கு எம்எஸ்பி மூலம் பயனடைந்தனர் என்று மேலும் கூறினார்.

அமேதியில் ஒரு உர கிடங்கு கூட முந்தைய ஆட்சியாளர்களால் உருவாக்கப்படவிலை என்பது கவலைக்குரியது என்று கூறிய மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, விவசாயிகள் உரங்களுக்காக லத்திகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் கூறினார்.

உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, அமேதியில் கவுரிகஞ்சில் ஒரு உர கிடங்கு அமைக்கப்பட்டதாகவும், நகரத்தில் ஒரு பைபாஸ் மற்றும் மேம்பாலத்திற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

வளர்ச்சித் திட்டங்களின் நன்மைகள் நேரடியாக சாமானிய மக்களைச் சென்றடைகின்றன. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி விவசாயிகளுக்கு நிதி பலத்தை அளித்துள்ளது. மேலும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா, உஜ்வாலா யோஜனா மற்றும் சவுபாக்யா யோஜனா ஆகியவற்றிலிருந்து மக்கள் நேரடியாக பயனடைந்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

Views: - 7

0

0