செப்,30 -க்குள் பல்கலைக்கழக இறுதி பருவ தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் – யூ.ஜி.சி சுற்றறிக்கை

1 September 2020, 12:43 pm
Quick Share

நாடு முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்குள் பல்கலைக்கழக இறுதி பருவ தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டன. இதன் காரணமாக பல மாநிலங்கள் பள்ளி பொதுத்தேர்வுகளை ரத்து செய்துவிட்டன. இதேபோல், கல்லூரி தேர்வுகளையும் ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனை சுட்டிக்காட்டி, கொரோனாவை காரணம் சொல்லி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களையும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்று யூ.ஜி.சி. திட்டவட்டமாக அறிவித்தது.

மேலும் கல்லூரி இறுதி தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டுமென்றும் அறிவித்திருந்தது. இந்நிலையில் இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து யூ.ஜி.சி.யின் இந்த முடிவை எதிர்த்து, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 31 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கானது நீதிபதி அசோக் பூஷன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்வினை நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டம் வழங்க முடியாது என்ற யூ.ஜி.சி-யின் கருத்தை ஏற்றுக்கொண்டார். கொரோனா காரணமாக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்குள் பல்கலைக்கழக இறுதி பருவ தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Views: - 13

0

0