புதுமாப்பிள்ளைக்கு வேற லெவல் விருந்து வைத்து அசத்திய மாமியார் : இத்தனை உணவு வகைகளா!!

20 January 2021, 6:01 pm
Virunthu - Updatenews360
Quick Share

ஆந்திரா : சங்கராந்தி விருந்துக்கு வந்த புது மாப்பிள்ளைக்கு 125 ரகமான விருந்து படைத்த மாமியாரின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதாவரி மாவட்டம் சம்பிரதாய கலாச்சாரங்களுக்கு மிகவும் பெயர் பெற்றது. அவ்வாறு மேற்கு கோதாவரி மாவட்டம் பீமவரத்தை சேர்ந்த புதுமண தம்பதியினர், சங்கராந்தி பண்டிகைக்காக மாமியார் வீட்டிற்கு வந்தனர்.

விருந்தாளியாக வந்த மருமகனுக்கு தனது கையால் 125 ரகமான உணவுகளை சமைத்து விருந்து படைத்து அசத்தியுள்ளார். தனது மகளுக்கும் மருமகனுக்கு அசத்தல் விருந்து படைத்த மாமியாரின் வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

மருமகனுக்கு மாமியார் படைத்த விருந்து என்ற பெயரில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ காட்சிக்கு மருமகனை விளம்பர மாடல் போன்று விருந்து வைத்து வீடியோ எடுத்து வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது போன்று பல தரப்பில் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Views: - 0

0

0