3 மாடிகள் கொண்ட திருமண மண்டத்தில் கோர தீவிபத்து : 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உடல்கருகி பலி..

Author: Babu Lakshmanan
26 August 2022, 9:50 am
Quick Share

உத்தரபிரதேசத்தில் திருமண மண்டபத்தில் நிகழ்ந்த கோர தீவிபத்தில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மொராதாபாத் நகரில் செயல்பட்டு வந்த 3 மாடிக் கட்டிட திருமண மண்டபத்தில், விஷேஷத்தையொட்டி உற்றார், உறவினர்கள் திரண்டிருந்தனர். அப்போது, மண்டபத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையறிந்து மண்டபத்தில் இருந்து பதறியடித்துக் கொண்டு அனைவரும் வெளியேற முற்பட்டனர். மேலும், தீவிபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இருப்பினும், அவர்கள் வருவதற்குள் 3 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 5 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.

இதனிடையே, 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயில் சிக்கிய 5 பேரை பத்திரமாக மீட்டனர். தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மின்கசிவுதான் காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Views: - 211

0

0