திட்டியதால் தந்தையைக் கொலை செய்த சிறுவன்..! கிரைம் பேட்ரோல் சீரியல் பார்த்து ஆதாரங்களை அழித்தது அம்பலம்..!

29 October 2020, 2:05 pm
dead_body_updatenews360
Quick Share

உத்தரபிரதேசத்தில் 17 வயதான ஒரு சிறுவன் தனது தந்தையை ஆத்திரத்தில் கொன்றதோடு, தொலைக்காட்சி சீரியலான கிரைம் பேட்ரோலை பார்த்து ஆதாரங்களை அழித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12 ஆம் வகுப்பு மாணவனான சிறுவன் நேற்று கைது செய்யப்பட்டபோது, காவல்துறையினர் அவரது மொபைல் போனை பரிசோதித்தபோது, அவர் கிரைம் பேட்ரோல் தொடரை 100 தடவைகளுக்கு மேல் பார்த்திருப்பதைக் கண்டறிந்தனர்.

மே 2’ம் தேதி சிறுவன் தனது தந்தை மனோஜ் மிஸ்ராவை கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுவன் தனது தந்தையை இரும்புக் கம்பியால் தலையில் அடித்துள்ளார். இதையடுத்து தந்தை மயக்கம் அடைந்தபோது, ஒரு துண்டு துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர், அதே இரவில், சிறுவன் தனது தாயின் உதவியுடன், தனது ஸ்கூட்டியில் சடலத்தை ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று, அடையாளத்தை அழிக்க பெட்ரோல் மற்றும் ஒரு டாய்லெட் கிளீனருடன் எரித்துள்ளார்.

மே 3’ம் தேதி சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், எந்தவொரு போலீஸ் நிலையத்திலும் காணாமல் போன நபர்களின் அறிக்கை தாக்கல் செய்யப்படாததால், கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் அடையாளம் காணப்படாமல் சடலம் வைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே மனோஜ் மிஸ்ரா நன்கொடை சேகரிப்பாளராக இஸ்கான் அமைப்பில் பணியாற்றியதால், மே 27 அன்று இஸ்கான் அதிகாரிகளின் அழுத்தத்தின் கீழ் அவர் காணாமல் போனதாக குடும்பம் புகார் அளித்தது.

அவரது கண்கள் மூலம் எரிக்கப்பட்டது மனோஜ் தான் என்று அவரது சக ஊழியர்கள் சிலர் அடையாளம் கண்டனர். மனோஜ் அடிக்கடி பகவத் கீதையைப் பிரசங்கிப்பதற்காகப் பயணிப்பதால், அவர் நீண்ட காலமாக இல்லாதிருப்பதை சந்தேகிக்கவில்லை என்று இஸ்கானில் உள்ள அவரது சகாக்கள் தெரிவித்தனர்.

மதுரா காவல்துறை கண்காணிப்பாளர் உதய் ஷங்கர் சிங், மனோஜின் மகனை விசாரிக்க போலீசார் அழைத்த போதெல்லாம், அவர் வருவதைத் தவிர்ப்பார் என்றும், எந்த சட்டத்தின் கீழ் தன்னை விசாரிக்க முயற்சிக்கிறார்கள் என்று போலீசாரிடம் கேட்பார் என்றும் தெரிவித்தார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரது மொபைலை பரிசோதித்தபோது, சிறுவன் கிரைம் பேட்ரோல் சீரியலின் அத்தியாயங்களை குறைந்தது 100 தடவைகள் பார்த்துள்ளதைக் கண்டறிந்தார்கள். இதையடுத்து பல சுற்று விசாரணைகளுக்குப் பிறகு, சிறுவன் இறுதியாக தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து சிறுவன் மற்றும் அவரது தாயார் சங்கீதா மிஸ்ரா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவரின் 11 வயது சகோதரி தாத்தா பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Views: - 20

0

0

1 thought on “திட்டியதால் தந்தையைக் கொலை செய்த சிறுவன்..! கிரைம் பேட்ரோல் சீரியல் பார்த்து ஆதாரங்களை அழித்தது அம்பலம்..!

Comments are closed.