குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை..! தலித் பெண்ணின் தந்தைக்கு ஆறுதல் கூறிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்..!

30 September 2020, 8:05 pm
Yogi_Adityanath_UpdateNews360
Quick Share

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று பாலியல் பலாத்காரத்திற்கு பலியான ஹாத்ராஸ் தலித் பெண்ணின் தந்தையுடன் பேசினார் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதாக உறுதியளித்தார். 

செப்டம்பர் 14’ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் ஹாத்ராஸில் நான்கு ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் 19 வயது தலித் பெண் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இன்று அதிகாலையில் அவர் தகனம் செய்யப்பட்டார். நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் இறுதிச் சடங்குகளை நடத்த உள்ளூர் போலீசார் கட்டாயப்படுத்தியதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்

அவரது மரணம் குறித்த செய்தி பரவியதால், டெல்லி மற்றும் ஹாத்ராஸிலும் அரசியல்வாதிகள், விளையாட்டு மற்றும் சினி நட்சத்திரங்கள் மற்றும் ஆர்வலர்கள் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் எதிர்ப்புக்கள் வெடித்தன. அவர்களின் வேதனையை வெளிப்படுத்தியதோடு பலியான பெண்ணுக்கு நீதி கோரினர்.  

இந்நிலையில் யோகி ஆதித்யநாத் பலியான பெண்ணின் தந்தையை வீடியோ கான்பெரன்ஸ் மூலம் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, குற்றமிழைத்தவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என உறுதியளித்தார். மேலும் இந்த வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும், மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு வழக்கை விசாரிக்கும் என்றும் கூறினார்.

மேலும் பலியான இளம் பெண்ணின் குடும்பத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், 25 லட்ச ரூபாய் இழப்பீடு, மாநில நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் தங்குமிடம் மற்றும் பாதிக்கப்பட்டவரின் ஒரு குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலை ஆகியவற்றை அறிவித்தார்.

இதற்கிடையில், இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அல்லது எஸ்ஐடியிடம் ஒப்படைக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உத்தரபிரதேசத்திலிருந்து டெல்லிக்கு மாற்றவும் மனுதாரர் கோரினார்.

Views: - 1

0

0