மருமகளை பாலியல் பலாத்காரம் செய்த மாமனார்..! தட்டிக்கேட்ட மகனை சுட்டுக்கொலை செய்த கொடூரம்..!

29 November 2020, 5:09 pm
rape_updatenews360
Quick Share

மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் ஒரு முதியவர் தனது மகனை சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் நேற்று வெளியாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தனது மகனை சுட்டுக் கொல்ல உரிமம் பெற்ற ரிவால்வரைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர் மஜோலாவின் அனுமன் நகர் பகுதியில் வசித்து வருகிறார். அவர் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன நிலையில், கடந்த நவம்பர் 25 ஆம் தேதி, வீட்டில் தனியாக இருந்தபோது தனது மாமனார் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார். சம்பவம் நடந்த நேரத்தில், பெண்ணின் கணவரும் பிற உறவினர்களும் வேறொரு நகரத்தில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

அந்தப் பெண் தனது அவல நிலையை தனது கணவர் மற்றும் மாமியாரிடம் நேற்று விவரித்துள்ளார். இந்நிலையில் அவரது கணவர் குற்றம் சாட்டப்பட்ட தனது தந்தையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, காவல்துறையை அணுகுவதாக அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. 

தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான வாக்குவாதம் அதிகரித்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவரின் இளைய மகன் தந்தையுடன் சேர்ந்து, அண்ணனுக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் மோதல் முற்றி குற்றம் சாட்டப்பட்டவர் தனது ரிவால்வரை எடுத்து தனது மகனை நோக்கி சுட்டார். இதில் அவர் பலியானார். 

இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட 56 வயது நபர் மற்றும் அவரது இளைய மகன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி அமித் குமார் ஆனந்த் தெரிவித்தார்.

இதற்கிடையே பாலியல் வன்கொடுமையை உறுதிப்படுத்த அந்த பெண்ணின் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என எஸ்பி தெரிவித்ததோடு, வழக்கின் அனைத்து அம்சங்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

Views: - 0

0

0