30 மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய உ.பி. துணை முதல்வர்..! எதற்காகத் தெரியுமா..?

24 January 2021, 1:16 pm
keshav_prasad_maurya_UpdateNews360
Quick Share

உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக தனது 30 மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்த தொகையை ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் உறுப்பினர் சுவாமி வாசுதேவநந்த் சரஸ்வதி ஆகியோரிடம் ஒப்படைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா, “நான் முதலில் ராமரின் பக்தன், பின்னர் தான் மாநில துணை முதல்வர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கோவில் கட்டுமானத்திற்காக மாநிலத்தின் பொதுப்பணித்துறை ஊழியர்கள் அமைப்பின் சார்பாக ரூ 1.10 கோடிக்கான காசோலையையும் துணை முதல்வர் அப்போது வழங்கினார்.

ராமர் கோவிலுக்காக ஐந்து தலைமுறையினர் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளதால், ராமர் கோவில் கட்டுவதற்கு முழு தேசத்தின் ஒத்துழைப்பும் கோரப்பட்டு வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்த ஒத்துழைப்பு அனைவரிடமிருந்தும் பெறப்பட்டு வருகிறது என அவர் மேலும் கூறினார்.

Views: - 0

0

0