குடிபோதையில் தங்கையையே பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன்..! வீடியோ எடுத்து மிரட்டிய நண்பன்..!

13 January 2021, 2:20 pm
Rape_UpdateNews360
Quick Share

உத்தரபிரதேசத்தின் மொராதாபாத்தில் உள்ள ஒருவர், குடிபோதையில் திருமணமான தனது சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த கொடூரத்தை அவரது நண்பர் வீடியோ எடுத்த அவலமும் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த மாதம் டிசம்பர் 23’ஆம் தேதி, பாதிக்கப்பட்டவரின் கணவர் வெளியில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தனது தங்கையின் வீட்டிற்கு சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அவரது நண்பரும், குடிபோதையில், இந்த செயலை தனது மொபைலில் படமாக்கியுள்ளார். பின்னர் அவர் இது குறித்து வெளியில் தெரிவித்தால் வீடியோ கிளிப்பை ஆன்லைனில் பதிவேற்றுவதாக மிரட்டியுள்ளார்.

பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் தன்னைத் தாக்கி துன்புறுத்தத் தொடங்கியபோதுதான் பாதிக்கப்பட்ட பெண் இந்த சம்பவம் குறித்து வெளியில் பேசியுள்ளார்.

அந்தப் பெண்ணின் பெற்றோர் ஆரம்பத்தில் காவல்துறைக்குச் செல்ல வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தனர். இருப்பினும், துன்புறுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்க முடிவு செய்தார். மொராதாபாத் போலீசார் அவரது சகோதரர் மற்றும் அவரது நண்பர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

தனது புகாரில், தனது கணவருக்கு தகவல் தெரிவித்ததாகவும், தம்பதியினர் உடனடியாக காவல்துறையை அணுக விரும்புவதாகவும், ஆனால் குடும்பத்தின் நற்பெயர் பாதிக்கப்படாமல் இருக்க அவரது பெற்றோரால் தடுக்கப்பட்டதாகவும் அந்த பெண் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர் தனது வீட்டிற்கு வெளியே தொடர்ந்து சுற்றித் திரிந்து தன்னைத் துன்புறுத்துவதற்கும் அச்சுறுத்துவதற்கும் முயன்றதைத் தொடர்ந்து புகார் அளிக்க முடிவு செய்ததாக அந்தப் பெண் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தலைமறைவாக உள்ளனர். ஆனால் விரைவில் அவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

Views: - 10

0

0