“என்ன நடந்தாலும் சரி தேர்வை தள்ளி வைக்க முடியாது“ : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!!

30 September 2020, 6:00 pm
SC Order - updatenews360
Quick Share

கொரோனா மற்றும் பருவமழையை காரணம் காட்டி யூபிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொரோனா மற்றும் பருவமழை பாதிப்புகளை காரணம் காட்டி மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யூ.பி.எஸ்.சி) தேர்வுகளை தள்ளி வைக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பிளத்துள்ளது.

இது குறித்து வெளியான தீர்ப்பில், அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை எழுத முடியாத மாணவர்களுக்கு இன்னொரு வாய்ப்பை வழங்கலாம் என அரசுக்கு உச்சநீதிமனற்ம் ஆலோசனை அளித்துள்ளது.

தேர்வு எழுதுபவர்கள் நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக யுபிஎஸ்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் 14ஆம் தேதி யூபிஎஸ்சி தேர்வுகள் நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை எழுதுகின்றனர். இந்த நிலையில் கொரோனா மற்றும் பருவமழையை காரணம் காட்டி யூபிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுத்தது நினைவுகூரத்தக்கது.

Views: - 12

0

0