அரசு அலுவலகங்களில் பிஎஸ்என்எல் சேவை கட்டாயம் : மத்திய அரசு உத்தரவு…!!

14 October 2020, 5:17 pm
bsnl - updatenews360
Quick Share

டெல்லி: நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்துவது கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவையை பயன்படுத்துவது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தொலைத்தொடர்பு துறை சார்பில் அனைத்து அமைச்சகங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த உத்தரவு கடிதத்தில், அமைச்சகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், தரைவழி இணைப்பு தொலைபேசி, இணையதள இணைப்பு- பிராட்பேண்ட் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பிஎஸ்என்எல் மற்றும் என்டிஎன்எல் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் சேவையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் நஷ்டத்தில் சிக்கி தவித்து வரும், பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனத்திற்கு மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

Views: - 41

0

0